ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் கல்லூரி நிறுவனம் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து அனுப்பி உள்ளார்.

Published Date: March 23, 2025

CATEGORY: CONSTITUENCY

ஸ்ரீவில்லிபுத்தூர் வி பி எம் எம் கல்லூரி நிறுவனம் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து அனுப்பி உள்ளார். அந்த வாழ்த்துரையில்  அவர் கூறியிருப்பதாவது:

வி.பி.எம்.எம் கல்வி குழுமம் கடந்த 25 ஆண்டுகளாக தென் தமிழகத்தில் மகத்தான கல்வி சேவையை வழங்கி வருவதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இக்கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கற்றல் என்பது ஒரு தொடர் செயல்பாடு பட்டம் பெற்றவுடன் கல்வி முடிந்து விடக்கூடாது, தினந்தோறும் தொடர வேண்டும்.  அனுதினமும் புதியவற்றை கற்க வேண்டும். உங்களை நவீன உலகத்திற்கு ஏற்றவாறு தகவமைத்து கொள்ள வேண்டும், என்பதை உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களில் படித்து உலகளாவிய பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்து நான் பெற்ற அனுபவங்களில் இருந்து கூற விரும்பும் கனிவான அறிவுரை.  கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்த (வி.பி.எம்.எம்)கல்லூரியின் அறிவியல் வளாகத்தை எனது தந்தையும், அன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராகவும் விளங்கிய பண்பாளர் திரு பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்கள் திறந்து வைத்ததை அறிந்து நெஞ்சம்  நெகிழ்கின்றேன். வி.பி.எம்.எம் கல்வி குழுமம் இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான திறமைமிக்க பட்டதாரி மாணவர்களை நம் தென் தமிழகத்தில் உருவாக்கிட வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன் என்று கூறியுள்ளார்.

Media: DAILYTHANTHI